நடிகர்கள்: அஜய் தேவ்கன், அனில் கபூர், கங்கனா, சமீரா,
மோகன் லால் மற்றும் பல நட்சத்திரங்கள்.
பிரியதர்ஷன் படம் என்றாலே……..மொக்கை கதன்னாலும் படத்துல
ஒரு ஃபெர்பெக்ஷன் இருக்கும், ஹீரோ & ஹீரோயின் அழகா இருப்பாங்க, ஒளிப்பதிவு கன்னுல
ஒத்திக்கற மாதிரி இருக்கும், இசை பாடல்களும் சூப்பராவே இருக்கும், ஒரு பெரிய நட்சத்திர
பட்டாளமே இருக்கும், ஹாலிவுட் படமாயிருந்தாலும் ஒரு மலையாளியாவது இருப்பான். இதெல்லாமே
இந்த படத்துலயும் இருக்கு.
இப்பல்லாம் இந்தி படமுன்னாலே, நம்ம கோடம்பாக்க ஆளுங்க
மதுரையிலருந்து கும்பகோனத்துக்கு சிப்ட் ஆன மாதிரி மும்பையிலருந்து லண்டனுக்கு சிப்ட்டாயிரானுங்க…..
லண்டனில கதைன்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது……..ஒரு
யூத்ஃபுல் லவ் ஸ்டோரி, ரயில்.........யெஸ் அதேதான்………இது ஒரு ஆக்சன், லவ், த்ரில் எல்லாம்
கலந்த இந்தியன் மசாலா. எல்லா பயலுவலும் இன்குலூடிங் வெள்ளைகாரன் மொதகொண்டு இந்தி பேசராங்க..(மலையாளிய
வுட்டா மலையாளமே பேச வைப்பாங்க)
அஜய் ஒரு தீவிரவாதி கனக்கா சமீரா ரொட்டியோட சேர்ந்து
லண்டன் ரயிலுல பாம் வைக்குறார். பாம் வச்சவர் கம்முன்னு போகாம லண்டன் ரயில்வே துறைக்கு(ரயில்வே
ஆபிசரா போமன் இரானி- 3 இடியட் பிரின்சிபால்) போன் பன்னி சொல்றாரு, ஐரோப்பிய நாடுகள்
இருக்கற நிலமை தெரியாம 10 மில்லியன் ஈரோ பனம் கேக்குறாரு. வேடிக்கை பாத்துக்கிட்டு
இருக்க அந்த ரயில் என்ன இந்தியாவிலயா ஓடுது. வெள்ளைகாரனுக்குதான் இந்தியாவ எப்படி ஆளனுமுன்னு
தெரியுமே அதனால.. ஒரு இந்தியாவ சேர்ந்த லண்டனுல போலிசா இருக்கும் அனில் கபூர களத்துல
எறக்குறான்.
ஏற்கனவே அதே ரயிலில் சுமாரான பெரிய போலிசா இருக்கும்
லாலேட்டன்(இதுக்கு எதுக்கு லால்) தன்னோட போலிசு படை மற்றும் ஒரு கைதியோட வேற வேலையா
பயனம் பன்றார்.
இனி என்ன நடக்குமுன்னு உங்களுக்கு புரிஞ்சுருக்குமே?
சரி இந்தியாவுல கேட்பாரில்லாம கிடக்கும் இவ்ளோ ரயிலை
வுட்டுடு, அஜய் ஏன் லண்டன் ரயிலுல போயி பாம் வைக்குறாருன்னு நீங்க கேட்டா?
ஏதோ சின்ன சின்ன இல்லீகல் வேலை பார்த்து பொழைச்சுக்கிட்டு
இருந்த தன்னை லண்டனவுட்டு, பொண்டாட்டி(கங்கனா) புள்ளையவுட்டு தொரத்துன வெள்ளைக்கார
அரசாங்கத்த பழிவாங்கதான்…………….
படத்தோட ரயில் சீன்ஸ் எல்லாமே ஹாலிவுட் படத்தோட அட்டை
காப்பி. மல்லிகா செராவத் வேற எதுக்குன்னே தெரியாம ஒரு கெட்ட ஆட்டம் ஆடிட்டு போவுது..
பிரியதர்ஷன் படமுன்னாலே யாரும் கதைய கூட கேக்காம, தன்னை
அழகா காமிப்பாருன்னு ஒத்துக்குவாங்க போல……..இருக்கும் சமீரா ரொட்டி கூட அழகா தெரியுதே………….
ரெம்ப எதிர்பாக்காம சும்மா ஒரு டைம் பாஸுக்கு பார்க்கலாம்………..
|
|



No comments:
Post a Comment